

பிரிட்டன் நடப்பு ஃபார்முலா 1 கார் பந்தய சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன், மெர்ஸிட ஸுடன் மேலும் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளார்.
அதனால் வரும் 2018 வரை மெர்ஸிடஸ் அணிக்காக ஃபார்முலா 1 பந்தயத்தில் கலந்து கொள்வார் ஹாமில்டன்.
புதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில் இப்போது கையெழுத்தாகியுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது மெர்ஸிடஸ். அவர் ரூ.997 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக லீவிஸ் ஹாமில்டன் கூறுகையில், “மெர்ஸிடஸ் எனது இல்லம் போன்றது. நான் தற்போது இயக்கி வரும் மெர்ஸிடஸ் எனது வாழ்க்கையில் இயக்கிய கார்களில் மிகச்சிறந்த காராகும். மெர்ஸிடஸ் பென்ஸ் நிறுவனம் 1998 முதல் எனக்கு ஆதரவளித்து வருகிறது.
இப்போது மேலும் 3 ஆண்டுகள் என்னுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் முடியும்போது மெர்ஸிடஸுடன் நான் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பேன்” என்றார்.