400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து பவுலர்: ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை

400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து பவுலர்: ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை
Updated on
1 min read

நியூஸிலாந்துக்கு எதிராக லீட்ஸில் வெள்ளியன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 400-வது விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.

மார்டின் கப்தில், ஆண்டர்சனின் 400-வது விக்கெட்டாக வீழ்ந்தார். ஆண்டர்சன் இந்த சாதனையை 104-வது டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தியுள்லார்.

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக ஒரு பந்து வீச்சாளர் 400 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிகிறார் என்றால் அது ஜேம்ஸ் ஆண்டர்சன்தான்.

இதற்கு முன்பாக இயன் போத்தம் 383 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளுக்கான இங்கிலாந்து சாதனையாக இருந்து வந்தது.

ஒட்டுமொத்தமாக 400 விக்கெட்டுகள் இலக்கை எட்டிய 12-வது பவுலர் ஆகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன், வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 8-வது பவுலர் ஆனார் ஆண்டர்சன்.

இன்று மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் குக், முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆட்டத்தின் 3-வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீச வந்தார். 2-வது பந்து ஃபுல் லெந்த் பந்து ஆஃப் ஸ்டம்ப் நோக்கி உள்ளே வந்தது கப்தில் முன்னால் வந்து ஆடினார் எட்ஜ் எடுத்து நேராக 2-வது ஸ்லிப் திசையில் இயன் பெல் கையில் கேட்ச் ஆனது. கப்திலை 0-வில் வீழ்த்தினார் ஆண்டர்சன்.

விக்கெட் எண் 401:

அதே ஓவரில் 4-வது பந்தில் நியூஸிலாந்தின் முதல் டெஸ்ட் சத நாயகன் கேன் வில்லியம்சன், ஆண்டர்சனின் சற்றே ஸ்விங் ஆன பந்தை தொட்டார், பட்லரிடம் எளிதான கேட்ச் ஆனது. வில்லியம்சனும் ரன் எடுக்கவில்லை.

நியூஸிலாந்து சற்று முன் வரை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in