ஐபிஎல் ஹைலைட் 10: ஃபேர் பிளே முதல் ட்வீட் மழை வரை!

ஐபிஎல் ஹைலைட் 10: ஃபேர் பிளே முதல் ட்வீட் மழை வரை!
Updated on
1 min read

வார்னர்-562

இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமை சன்ரைஸர்ஸ் கேப்டன் டேவிட் வார்னருக்கு கிடைத்தது. அவர் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 562 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டது.

டுவைன் பிராவோ -26

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தட்டிச் சென்றார். 16 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராவோவுக்கு ஊதா தொப்பி வழங்கப்பட்டது.

வளர்ந்து வரும் வீரர்

இந்த ஐபிஎல் தொடரின் வளர்ந்து வரும் வீரராக டெல்லி டேர்டெவில்ஸ் தொடக்க வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். அவர் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 439 ரன்கள் குவித்தார்.

ஃபேர் பிளே விருது

மிகவும் கண்ணியத்தோடு விளையாடிய அணிக்கு வழங்கப்படும் ஃபேர் பிளே விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்தது.

4 சதங்கள்

இந்த ஐபிஎல் தொடரில் 4 சதங்கள் அடிக்கப்பட்டன. பெங்களூர் வீரர்கள் டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில், சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர் பிரென்டன் மெக்கல்லம், ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வாட்சன் ஆகியோர் தலா ஒரு சதமடித்தனர்.

சிக்ஸர் சிங்கம்

இந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசியவருக்கான விருது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் தொடக்க வீரர் கிறிஸ் கெயிலுக்கு கிடைத்தது. அவர் 38 சிக்ஸர்களை விளாசினார்.

பவுண்டரி மன்னன்

இந்த ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரிகளை விளாசியவர் என்ற பெருமை சன்ரைஸர்ஸ் கேப்டன் டேவிட் வார்னருக்கு கிடைத்தது. அவர் 65 பவுண்டரிகளை விளாசினார்.

692 சிக்ஸர்கள்

இந்தத் தொடரில் மொத்தம் 692 சிக்ஸர்கள் விளாசப்பட்டன.

686 விக்கெட்டுகள்

இந்தத் தொடரில் மொத்தம் 686 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

ட்விட்டரில் 35 கோடி

8-வது ஐபிஎல் போட்டியின்போது அது தொடர்பாக 35 கோடி பேர் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை பதிவு செய்து உரையாடியுள்ளனர். அதிலும் சென்னை-மும்பை இடையிலான இறுதிப் போட்டி மிகப்பெரிய அளவில் ட்விட்டரில் பேசப்பட்டுள்ளது.



அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in