Last Updated : 06 May, 2015 09:43 AM

 

Published : 06 May 2015 09:43 AM
Last Updated : 06 May 2015 09:43 AM

பெங்களூரு- பஞ்சாப் இன்று மோதல்

பெங்களூருவில் இன்று நடை பெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 11 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பெங்களூரு அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை தக்கவைப்பதில் தீவிரம் காட்டும். ஆனால் பஞ்சாப் அணியோ 9 ஆட்டங்களில் விளையாடி, அதில் 7-ல் தோல்வி கண்டதோடு, அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்துவிட்ட நிலையில் களமிறங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட பெங்களூரு அணி, உள்ளூர் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் அபாரமாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இங்கு நடைபெற்ற 4 ஆட்டங்களில் முதல் 3-ல் தோல்வி கண்ட பெங்களூரு அணி, 4-வது ஆட்டத்தில் கொல்கத் தாவை பந்தாடியது. அதனால் அதேபோன்றதொரு ஆட்டத்தை அந்த அணி இன்று வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு அணி கேப்டன் கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ், மன்தீப் சிங் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. கொல்கத்தாவை புரட்டியெடுத்த மன்தீப் சிங், சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு பந்தைக்கூட சந்திக்காத நிலையில் ரன் அவுட்டானது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு ரசிகர்களுக்கு மன்தீப் சிங் விருந்து படைப்பார் என நம்பலாம்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மிட்செல் ஸ்டார்க்கின் வருகைக்குப் பிறகு அந்த அணி பலம் பெற்றுள்ளது. டேவிட் வியெஸ், ஸ்டார்க்கிற்கு பக்கபலமாக பந்துவீசி வருகிறார். சுழற்பந்து வீச்சில் ஹர்ஷல் படேல் பலம் சேர்க்கிறார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் பேட்டிங், பவுலிங் என இரு துறைகளுமே முற்றிலுமாக செயலிழந்துவிட்டன. வீரேந்திர சேவாக், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு ஆடாதது பெரும் பின்னடைவாக அமைந்தது. மில்லர் மட்டுமே ஓரளவுக்கு நம்பிக்கையளிக்கிறார்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத் தவரையில் பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட மிட்செல் ஜான்சனின் பந்துவீச்சு எடுபடாமல் போனது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. சந்தீப் சர்மா, அக் ஷர் படேல் ஆகி யோர் மட்டுமே ஓரளவு சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் பஞ்சாப் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுக்கு சவால் அளிக்குமா அல்லது சரண்டர் ஆகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

போட்டி நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 14 முறை மோதியுள்ளன. அதில் பெங்களூரு 5 முறையும், பஞ்சாப் 9 முறையும் வெற்றி கண்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x