ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: விகாஸ், சீமா உள்ளிட்ட நால்வரின் பெயர் பரிந்துரை
2015-ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா, வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா உள்ளிட்ட 4 பேரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது இந்திய தடகள சம்மேளனம்.
விகாஸ் கவுடாவின் பெயர் 2-வது முறையாக இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதோடு, ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த ஆண்டும் கேல் ரத்னா விருதுக் கான இறுதிப்பட்டியலில் கவுடா வின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் கடந்த முறை கேல் ரத்னா விருது பெறுவதற்கு தகுதியான நபர்கள் யாரும் இல்லை என்று கூறி அந்த விருது வழங்கப்படவில்லை.
கேல் ரத்னா விருதுக்கு பரிந்து ரைக்கப்பட்டுள்ள மற்றொரு நபரான சீமா பூனியா, கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. கவுடா, பூனியா தவிர பாரா தடகள வீரர்களான எச்.என்.கிரிஷா, தேவேந்திர ஜஹாரியா ஆகியோரின் பெயர்களும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னணி ஓட்டப் பந்தய வீராங்கனையான பூவம்மா, மும்முறைத் தாண்டுதல் வீரர் அரவிந்தர் சிங், ஓட்டபந்தய வீராங்க னைகள் ஜெய்ஷா, சீமா ஆகியோ ரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
