

வான்கடே மைதானத்தில் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ள மும்பை இண்டியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஐபிஎல் லீக் போட்டியைக் காண கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாரூக் கான் அனுமதிக்கப்படமாட்டார் என தெரிகிறது.
2012-ல் மும்பை-கொல்கத்தா இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடை பெற்றது. அப்போது ஷாரூக் கானுக்கும், பாதுகாப்பு ஊழிய ருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வான்கடே மைதான வளாகத்தில் நுழைய ஷாரூக் கானுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இதனால் கடந்த இரு சீசன் களில் மும்பையில் நடைபெற்ற ஆட்டங்களைக் காண ஷாரூக் கான் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்தமுறை யும் அவரை அனுமதிக்கமாட் டோம் என மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
அங்குள்ள நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அவருக்கு விதிக் கப்பட்ட தடை அமலில் உள்ள தால் அவர் இந்த முறையும் வான்கடேவுக்குள் நுழைய முடியாது” என்றார்.