எம்.சி.சி. அணியில் சச்சினுடன் சேர்ந்து ஆடுகிறார் பிரையன் லாரா

எம்.சி.சி. அணியில் சச்சினுடன் சேர்ந்து ஆடுகிறார் பிரையன் லாரா
Updated on
1 min read

லார்ட்ஸ் மைதானத்தின் 200வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் எம்.சி.சி. அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் அணிக்கும் கிரிக்கெட் போட்டி ஒன்று ஜூலை 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் எம்.சி.சி. அணிக்காக சச்சினுடன் இணைந்து மேற்கிந்திய முன்னாள் பேட்ஸ்மென் பிரையன் லாரா விளையாடுகிறார். எம்.சி.சி. அணியின் கேப்டனாக சச்சின் செயல்படுகிறார்.

அதேபோல் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் எம்.சி.சி. அணிக்கும், மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் டினோ பெஸ்ட் ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் அணிக்கும் விளையாடுகிறார்.

சச்சினுடன் ராகுல் திராவிட் பெயரும் எம்.சி.சி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் எம்.சி.சி. அணியில் இடம்பெற்றுள்ளார்.

சச்சின் கேப்டன் பொறுப்பு வகிக்கும் எம்.சி.சி. அணிக்கு எதிராக விளையாடும் ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் அணிக்கு ஷேன் வார்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியினால் ஒதுக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் ஷேன் வார்ன் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர்களுடன் முத்தையா முரளிதரன், ஷாகித் அஃப்ரீடி ஆகியோரும் ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் அணியில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in