

# பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் நகரில் ஜூன் 20 முதல் ஜூலை 4 வரை நடைபெறவுள்ள உலக ஹாக்கி லீக் போட்டியின் அரையிறுதியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரீது ராணி கேப்டனாகவும், தீபிகா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
# சீன தைபேவில் நடைபெற்ற ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சண்டீகர் திரும்பிய பஞ்சாப் குத்துச்சண்டை வீரர் மன்தீப் சாந்துவுக்கு அம்மாநில அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
# ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஷோயிப் மாலிக், முகமது சமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
# லார்ட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளான நேற்று 345 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி வெற்றி பெற 284 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. முன்னதாக இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸில் 478 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
# 8-வது ஐபிஎல் போட்டியின்போது அது தொடர்பாக 35 கோடி பேர் டுவிட்டரில் தங்கள் கருத்துகளை பதிவு செய்து உரையாடியுள்ளனர். அதிலும் சென்னை-மும்பை இடையிலான இறுதிப் போட்டி மிகப்பெரிய அளவில் டுவிட்டரில் பேசப்பட்டுள்ளது.