Last Updated : 14 May, 2015 09:52 AM

 

Published : 14 May 2015 09:52 AM
Last Updated : 14 May 2015 09:52 AM

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா

ரோம் மாஸ்டர்ஸ் (இத்தாலி ஓபன்) டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் தரவரிசை அடிப்ப டையில் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுவதற்கு தகுதி பெற்றிருந்த செர்பியாவின் ஜோகோவிச், அதில் 6-1, 6-7 (5), 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோவை தோற்கடித்தார்.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச், டை பிரேக்கர் வரை சென்ற அடுத்த செட்டை 6-7 (5) என்ற கணக்கில் அல்மாக் ரோவிடம் இழந்தார். டை பிரேக்கரில் ஒரு கட்டத்தில் 5-2 என்ற கணக்கில் ஜோகோவிச் முன்னிலை இருந்தபோது, திடீரென ஆக்ரோஷ மாக ஆடிய அல்மாக்ரோ தொடர்ச் சியாக 5 புள்ளிகளை வென்று 2-வது செட்டை தன்வசமாக்கினார். இதனால் ஜோகோவிச்சுக்கு நெருக்கடி ஏற்பட, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அல்மாக்ரோவை வீழ்த்தினார். இதன்மூலம் தொடர்ச்சியாக 18-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் ஜோகோவிச்.

முன்னாள் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவும் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது 2-வது சுற்றில் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் ஜுவான் மொனாக்கோவை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த குரேஷியாவின் மரின் சிலிச் 4-6, 3-6 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கில்லர்மோ கிரேஸியா லோபஸிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத் தில் இருக்கும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் அனாஸ்டாஸியாவைத் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x