Published : 30 May 2015 07:50 PM
Last Updated : 30 May 2015 07:50 PM

அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரரானார் அலிஸ்டர் குக்: கூச் சாதனை முறியடிப்பு

அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த இங்கிலாந்து வீரரானார் கேப்டன் அலிஸ்டர் குக். கிரகாம் கூச் வைத்திருந்த சாதனையை முறியடித்தார் அலிஸ்டர் குக்.

நியூஸிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 350 ரன்கள்க்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் அலிஸ்டர் குக் 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அவர் 29 ரன்களிலிருந்த போது இன்னிங்ஸின் 28-வது ஓவரை டிம் சவுதீ விச, 3-வது பந்தை அருமையான ஸ்கொயர் டிரைவ் அடித்து பவுண்டரிக்கு விரட்டினார் அலிஸ்டர் குக். இந்த ஷாட் அவரை இங்கிலாந்தின் முன்னணி டெஸ்ட் ரன் ஸ்கோரராக மாற்றிவிட்டது.

அதாவது 8,900 ரன்கள் எடுத்த கிரகாம் கூச்தான் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஒட்டுமொத்த ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை வைத்திருந்தார். இன்று குக் அதனை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்தின் டாப் 10 டெஸ்ட் வீரர்கள்:

1. அலிஸ்டர் குக் 8,902 (ஆடி வருகிறார்)

2. கிரகாம் கூச் 8900 ரன்கள்

3. அலெக்ஸ் ஸ்டூவர்ட் 8463 ரன்கள்

4. டேவிட் கோவர்:8,231 ரன்கள்

5. கெவின் பீட்டர்சன் 8,181 ரன்கள்

6. ஜெஃப் பாய்காட் 8,114 ரன்கள்

7. மைக்கேல் ஆர்த்தர்டன் 7,728 ரன்கள்

8. கோலின் கவுட்ரி 7,624 ரன்கள்

9. இயன் பெல் 7,341 ரன்கள்

10. வால்டர் ஹேமண்ட் 7,429 ரன்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x