பேட்டிங் பவர் பிளேயை நீக்க ஐசிசி கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை

பேட்டிங் பவர் பிளேயை நீக்க ஐசிசி கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை
Updated on
1 min read

ஒருநாள் கிரிக்கெட்டில் பவுலர்கள் பங்கு கணிசமாக குறைந்து வருவதை கணக்கில் எடுத்துக் கொண்டும், பேட்டிங் ஆதிக்கத்தைக் குறைக்கவும், பேட்டிங் பவர் பிளே-யை அகற்ற ஐசிசி கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

மேலும் ஒரு நாள் போட்டிகளில் கடைசி 10 ஓவர்களில் 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே 5 பீல்டர்களை அனுமதிக்கவும் ஐசிசி கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இந்தக் கமிட்டி முன்னாள் இந்திய ஸ்பின் மேதை அனில் கும்ளே தலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டின் பல்வேறு விவகாரங்களை விவாதிக்கையில் இந்த முடிவை எடுத்து, பரிந்துரை மேற்கொண்டுள்ளது.

முதல் 10 ஓவர்களில் கட்டாயமாக 2 கேட்சர்கள் இருப்பது அவசியம் என்ற விதிமுறையும், பேட்டிங் பவர் பிளே விதிமுறையும், கடைசி 10 ஓவர்களில் 4 பீல்டர்களே 30 யார்டு சர்க்கிளுக்கு வெளியே அனுமதிக்கப்படும் விதிமுறை ஆகியவற்றை அகற்ற பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் பேட் அளவு குறித்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வர ஐசிசி முடிவெடுக்காது என்று தெரிகிறது.

அதேபோல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வீசப்படும் அனைத்து வகையான நோ-பால்களுக்கும் ஃப்ரீ ஹிட் முறை கொண்டு வரவும் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in