பிளே ஆஃப் முதல் போட்டி மழையால் ஒரு நாள் தள்ளிவைப்பு

பிளே ஆஃப் முதல் போட்டி மழையால் ஒரு நாள் தள்ளிவைப்பு
Updated on
1 min read

கொல்கத்தாவில் கனமழை பெய்ததன் காரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நாளை (புதன்கிழமை) 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும் மைதான நிலவரம் முழுப் போட்டியை நடத்த தோதாக இல்லையெனில் 5 ஓவர்கள் போட்டியாகக் குறைக்கப்படும்.

மைதானம் அதற்கும் தயாராக இல்லையெனில் வெறும் சூப்பர் ஓவர் வெற்றியைத் தீர்மானிக்கும். சூப்பர் ஓவர் மட்டுமே என்று முடிவெடுக்கப்பட்டால் ஆட்டம் இரவு 9.10 மணிக்குத் துவங்கும்.

இதுவும் முடியவில்லையெனில் லீக் சுற்று ஆட்டங்களில் அதிக வெற்றியைப் பெற்ற அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதாவது கிங்ஸ் லெவன் பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in