மழை விளையாடியதால் போட்டி கைவிடப்பட்டது: ‘பிளே ஆப்’ சுற்றில் பெங்களூரு அணி

மழை விளையாடியதால் போட்டி கைவிடப்பட்டது: ‘பிளே ஆப்’ சுற்றில் பெங்களூரு அணி
Updated on
1 min read

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணியும் ‘பிளே ஆப்’ சுற்றில் விளையாட தகுதி பெற்றது.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டெல்லி டேர்டெ வில்ஸ் அணிக்கு இடையிலான ஆட்டம் மழையால் முடிவு எதுவும் தெரியாமல் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதையடுத்து பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் ‘பிளே ஆப்’ சுற்றில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது. டெல்லி அணி ஏற்கெனவே போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது.

14 லீக் ஆட்டங்களை முடித்துள்ள பெங்களூரு அணி 7 வெற்றி 5 தோல்வி, 2 போட்டிகளில் முடிவு இல்லை என்ற நிலையில் 16 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் டி காக், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியாக விளையாட தொடங்கினர். ஸ்ரேயாஸ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் டுமினியும் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். இதனால் டெல்லியின் ஸ்கோர் வேக மாக உயர்ந்தது. 11-வது ஓவரில் 100 ரன்களை எட்டிய அந்த அணி 17-வது ஓவரில் 150 ரன்களை கடந்தது.

டி காக் 39 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் 11 ரன்கள் எடுத்தார். டுமினி 43 பந்துகளில் 67 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

அடுத்து பெங்களூரு அணியில் கோலி, கெயில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். 1.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடந்து மழை பெய்ததால் மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in