

செயின்ட் ஜோசப் 26-வது மாவட்டங்களுக்கு இடையிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆடவர் பிரிவில் சென்னை, திண்டுக்கல் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. மகளிர் பிரிவில் கோவை, சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
ஆடவர் காலிறுதியில் சென்னை அணி கோவை அணியை 67-43 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில், திண்டுக்கல், விருதுநகர் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் திண்டுக்கல் அணி 49-47 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
மகளிர் காலிறுதியில் கோவை அணி கடலூர் அணியை 50-26 என்ற புள்ளிகள் கணக்கில் மிக எளிதாக வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் சென்னை அணி மதுரை அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.