

மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசை யில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இருநாட்களுக்கு முன்பு முடி வடைந்த ரோம் மாஸ்டர்ஸ் டென் னிஸ் போட்டியில் ஷரபோவா சாம் பியன் பட்டம் வென்றார். இதுவே அவரது தரவரிசை முன்னேற்றத் துக்கு முக்கிய காரணம்.
அமெரிக்காவின் செரீனா வில்லி யம்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இருந்து ருமேனியாவின் சிமோனா ஹெலப் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
செக். குடியரசின் பெட்ரா விட்டோவா, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி ஆகி யோர் தொடர்ந்து 4 மற்றும் 5-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்ஸா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வரும் ஸ்விட்சர் லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் 2-வது இடத்தில் உள்ளார். இந்த ஜோடி ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தது.
ஆடவர் ஒற்றையர் தரவரிசை யில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே ஆகியோர் முறையே 2, 3-வது இடத்தில் உள் ளார். ஸ்பெயினின் ரபேல் நடால் 7-வது இடத்தில் உள்ளார்.