நைஸ் ஓபன்: போபண்ணா ஜோடி தோல்வி

நைஸ் ஓபன்: போபண்ணா ஜோடி தோல்வி
Updated on
1 min read

பிரான்ஸின் நைஸ் நகரில் நடைபெற்ற நைஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பாகிஸ்தானின் குரேஷி ஜோடி தோல்வி கண்டு சாம்பியன் பட்டத்தை இழந்தது.

இந்த ஜோடி 2-6, 0-6 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிஸான்-ஆஸ்திரியாவின் பிலிப் ஆஸ்வால்ட் ஜோடியிடம் தோல்வி கண்டது. இந்த சீசனில் இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றில் தோல்வி கண்டுள்ளது போபண்ணா-குரேஷி ஜோடி. முன்னதாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற சிட்னி ஓபன் இறுதிச்சுற்றில் இந்த ஜோடி தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in