

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இங்கிலாந்தின் 5 விக்கெட்டுகளை 39 ரன்களுக் குள் கைப்பற்றி பதிலடி கொடுத் துள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.
பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 89.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஜோர்டான் (3) பிராட் (10), ஆண்டர்சன் (0) ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 257 ரன்கள் எடுத்தது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டெய்லர் 3 விக்கெட்டுகளும், கேப்ரியல், ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸைத் தொடங் கிய மேற்கிந்தியத் தீவுகளின் பிரத்வெய்ட் (0), ஹோப் (5), சாமுவேல்ஸ் (9) ஆண்டர்சனின் வேகத்துக்குப் பணிந்தனர். பிராவோ (9) மொயின் அலி சுழலில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய பிளாக்வுட் 61 பந்துகளில் அரைசதம் கடந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி விக் கெட்டாக பிளாக்வுட் (85) வீழ்ந்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் 49.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
2-வது இன்னிங்ஸைத் தொடங் கிய இங்கிலாந்துக்கு மேற் கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் பதிலடி கொடுத்தது. குக் (4), டிராட் (9), பெல் (0),ஜோ ரூட் (1), மொயீன் அலி (8) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களுடன் ஆட்டமிழந்தனர். டெய்லர் 2 விக்கெட்டுகளையும், கேப்ரியல், ஹோல்டர், பெருமாள் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
கோரி பேலன்ஸ் (12), ஸ்டோக்ஸ் (0) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கிலாந்து 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.