

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் மரியா ஷரபோவாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
இறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர் லாந்தின் ரோஜர் பெடரரை, ஜோகோவிச் எதிர்கொண்டார். இதில் 6-4,6-3 என்ற நேர் செட் களில் ஜோகோவிச் எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது இப்போட் டியில் அவர் வெல்லும் 4-வது பட்டமாகும்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுரஸ்ஸை எதிர்கொண்டார். இதில் 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை ஷரபோவா இழந்தார். எனினும் அடுத்த சுற்று களில் சுதாரித்து விளையாடிய அவர், 7-5, 6-1 என்ற கணக்கில் அவற்றை கைப்பற்றி, போட்டியில் வென்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் தனதாக்கினார்.
இந்த ஆண்டில் பிரிஸ்பென் ஓபன் டென்னிஸில் பட்டம் வென்ற பிறகு ஷரபோவா வெல்லும் 2-வது பட்டம் இதுவாகும். இப்போட்டி குறித்து கருத்துத் தெரிவித்த அவர்,
‘இறுதி ஆட்டத்தின் தொடக்கத்தில் நான் அதிகம் தவறுகளை செய்தேன். எனினும் அடுத்த இரு செட்களிலும் அதனை திருத்திக் கொண்டேன். இந்த வெற்றி மிகுந்த தன்னம்பிக்கையை அளித்துள்ளது’ என்றார்.