இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20-யில் விளாசித்தள்ளிய கிறிஸ் கெயில்

இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20-யில் விளாசித்தள்ளிய கிறிஸ் கெயில்
Updated on
1 min read

இங்கிலாந்தில் நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் அணிக்காக எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 92 ரன்களை விரைவு கதியில் விளாசி அசத்தினார்.

நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சோமர்செட் அணி கெயிலின் அதிரடியினால் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த டென் டஸ்சாதே தலைமை எஸ்ஸெக்ஸ் அணி நியூஸிலாந்து வீரர் ஜெஸி ரைடர் (54 ரன்கள், 28 பந்துகள், 8 பவுண்டரி 1 சிக்சர்) மற்றும் வெஸ்ட்லி (56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 68) ஆகியோரது அரைசதங்களுடன் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தனர், சோமர்செட் அணியில் பாக் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொஹைல் தன்வீர் 2 விக்கெட்டுகளையும், ஏ.சி.தாமஸ் 4 விக்கெட்டுகளையும், ஆலன்பி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய ஏ.சி.தாமஸ் தலைமை சொமர்செட் அணி, கடைசி பந்தில் 177-வது ரன்னை எடுத்து பரபரப்பான முறையில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றியைச் சாதித்தது.

இதில் மேற்கிந்திய அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 59 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 92 ரன்கள் விளாசி இங்கிலாந்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

இங்கிலாந்து உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் முதன்முதலாக விளையாடினார் கிறிஸ் கெயில். செல்ம்ஸ்போர்ட் ரசிகர்கள் இவர் ஆட்டமிழந்தவுடன் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். 18.2வது ஓவரில்தான் கெயில் ஆட்டமிழந்தார்.

ஆனால் 50 ரன்களை கெயில் எடுத்து முடித்த பிறகு ரீசி டாப்லி பந்தை கெயில் தேர்ட் மேனில் தூக்கி அடிக்க அங்கே அதனை டேவிட் மாஸ்டர்ஸ் என்ற வீரர் கேட்சைப் பிடிக்கத் தவறினார்.

கடைசி ஓவரில் சோமர்செட் வெற்றிக்கு 5 ரன்கள் தேவையாக இருந்தது. இதில் பொபாரா, சொஹைல் தன்வீர் விக்கெட்டை முதல் பந்தில் கைப்பற்றினார்.

கிரிகரிக்கு பொபாரா நன்றாகவே வீசினார். 3-வது பந்தில் 1 ரன்னும் 4-வது பந்தில் வாலர் 2 ரன்களையும் எடுத்தனர். ஆனால் 5 மற்றும் 6-வது பந்தில் 2 சிங்கிள்கள் எடுக்கப்பட சோமர்செட் வெற்றி பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in