கொல்கத்தாவை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் தகுதி

கொல்கத்தாவை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் தகுதி
Updated on
1 min read

ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி ப்ளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. மும்பை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவைப் பொறுத்தே கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா என்பது தெரியும்.

டாஸ் வென்று முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை அதிரடியாகக் குவித்தது. அந்த அணியின் வீரர் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் சதம் கடந்து அணி வலுவான ஸ்கோரை எட்ட முக்கியக் காரணமாக இருந்தார்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி முதல் ஓவரில் காம்பீரை இழந்தது. 3-வது ஓவரில் உத்தப்பா பெவிலியன் திரும்ப, பாண்டே- யூசுப் பதான் ஜோடி களத்தில் இணைந்தது. களத்தில் 5 ஓவர்கள் இணைந்து ஆடிய இந்த இணை 51 ரன்களைக் குவித்தது. பாண்டே வீழ்ந்தாலும், அடுத்து வந்த ரஸ்ஸல், அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

தேவைக்கேற்ப ரன்களை கொல்கத்தா எடுத்து வர, 14-வது ஓவரில் ரஸ்ஸல் மோரிஸின் பந்துவீச்சில் 37 ரன்களுக்கு வீழ்ந்தார். பதானும் 16-வது ஓவரில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை மட்டுமே கொல்கத்தாவால் எடுக்க முடிந்தது. கடினமான இலக்கை தொடும் தூரத்தில் வந்து கொல்கத்தா தோல்வியுற்றது.

ஆட்டநாயகனாக ஷேன் வாட்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in