Last Updated : 20 Apr, 2015 02:34 PM

 

Published : 20 Apr 2015 02:34 PM
Last Updated : 20 Apr 2015 02:34 PM

கேட்ச்சுக்கு முயன்று மோதியதில் விபரீதம்: பெங்கால் இளம் கிரிக்கெட் வீரர் மரணம்

வங்காளத்தைச் சேர்ந்த அங்கிட் கேஷ்ரி என்ற வீரர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பந்தை கேட்ச் பிடிக்கச் சென்ற போது சவுரப் மொண்டால் என்ற வீரருரன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தலையில் பலத்த அடிபட்டு இன்று காலை, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார். இவருக்கு வயது 20.

மைதானத்தில் மயங்கிச் சரிந்த இவரது மூச்சை மீட்க மற்றொரு வீரர் முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை. உடனடியாக இவர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன்ன்றி இன்று (திங்கட் கிழமை) மாரடைப்பால் காலமானார்.

கடந்த வெள்ளிக்கிழமை வங்காள கிரிக்கெட் லீக் டிவிஷன் 1 போட்டியில் கிழக்கு வங்காள அணியும், பவானிபூர் அணியும் விளையாடின. ஜாதவ்பூர் பல்கலைக் கழக மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

அர்னாப் மண்டி என்ற வீரருக்கு பதிலி வீரராகக் களமிறங்கினார் அங்கிட் கேஷ்ரி, இன்னிங்ஸ் முடிய ஒரு ஓவர் இருக்கும் நிலையில், 44-வது ஓவரில் பவுலர் மோண்டால் வீச பேட்ஸ்மென் அதனை கவர் மீது தூக்கி அடிக்க ஷார்ட் சரியாக சிக்கவில்லை. கேட்சைப் பிடிக்க பவுலர் மோண்டால் வந்தார். டீப் கவர் திசையிலிருந்து வேகமாக அங்கிட் கேஷ்ரியும் வந்தார்.

இருவரும் ஒருவரையொருவர் கவனிக்காமல் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் மோண்டாலின் முழங்கால் கேஷ்ரியின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பயங்கரமாக அழுந்தியிருக்கிறது.

மோண்டால் வலியால் மைதானத்தில் சுருண்டு விழ, கேஷ்ரி பேச்சு, மூச்சில்லாமல் சரிந்தார். கேஷ்ரியின் வாயிலிருந்து ரத்தம் வழிந்ததாக மற்றொரு வீரர் ஷிவ்சாகர் என்பவர் தெரிவித்தார். இந்த வீரர்தான், கேஷ்ரியின் வாயுடன் வாய் வைத்து ஓரளவுக்கு மூச்சை வரவைத்துள்ளார். அதன் பிறகே கேஷ்ரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

திங்கட் கிழமை காலை சிறப்பு மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் இன்று காலை மிகப்பெரிய மாரடைப்பு தாக்க கேஷ்ரி மரணமடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x