

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள 45 வீரர்களை தேர்வு செய்துள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அவர்களுக்கு ரூ.30 கோடி செலவில் சிறப்பு பயிற்சி அளிக்க இருக்கிறது.
இதில் துப்பாக்கி சுடுதல் வீரர் வீராங்கனைகள் மட்டும் 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாட்மிண்டனில் சாய்னா நெவால், பி.வி.சிந்து, காஷ்யப், ஸ்ரீகாந்த், குருசாய்தத், பிரணாய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குத்துச் சண்டையில் மேரி கோம், விஜேந்தர் உட்பட நால்வரும், மல்யுத்தத்தில் சுஷில் குமார், யோகேஷ்வர் தத் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2016-ம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.