

தோனி தனது இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை தவறாக வைத்திருந்ததன் காரணமாக அவருக்கு அபராதம் விதித்தது ராஞ்சி போலீஸ்.
அவரது பைக்கில் நம்பர் பிளேட் சரியாக இல்லாத காரணத்தினால் தோனிக்கு ரூ.450 அபராதம் விதித்ததாக ராஞ்சி போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி கார்த்திக் என்பவர் தெரிவித்தார்.
முன் பக்கம் இருக்கும் நம்பர் பிளேட் படுக்கைவசமாக இல்லாமல் செங்குத்தாக இருந்துள்ளது. இது மோட்டார் வாகனச் சட்ட மீறலாகும்.
இதனையடுத்து மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 179-இன் கீழ் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராஞ்சியில் கொஞ்ச நாட்களே இருந்த தோனி தற்போது ஐபிஎல் தொடருக்காக ஊரை விட்டு புறப்பட்டு விட்டார். ஆனாலும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அபராதம் கட்ட ஒப்புக் கொண்டுள்ளதாக காவல அதிகாரி கார்த்திக் தெரிவித்தார்.