

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் அமெரிக்க ஓபன் நடப்பு சாம்பி யனான குரேஷியாவின் மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் சிலிச் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் டொமினிகனின் விக்டர் எஸ்ட்ரெல்லா பர்கஸிடம் தோல்வி கண்டார்.
சர்வதேச தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் மரின் சிலிச், 53-வது இடத்தில் இருக்கும் விக்டரிடம் தோற்றதற்கு அவரு டைய மோசமான சர்வீஸே காரணமாகும். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட விக்டர், சிலிச்சின் சர்வீஸை 4 முறை முறியடித்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற சிலிச், அதன்பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு சீசனின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட வில்லை.
காயத்திலிருந்து மீண்ட பிறகு கடந்த மாதம் நடைபெற்ற இண்டியன்வெல்ஸ் போட்டியில் களமிறங்கிய சிலிச், அதில் ஜொலிக்கவில்லை. அவருடைய சறுக்கல் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.