

பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய/ஓசியானியா குரூப் 2 சுற்று ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் சானியா மிர்சா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்தப் போட்டியில் இந்தியா தவிர, இந்தோனேசியா, ஈரான், கிர்கிஸ்தான், மலேசியா, ஓமன், பசிபிக் ஓசியானியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.
சானியா மிர்சா போட்டியில் விளையாடும் கேப்டனாக (பிளேயிங் கேப்டன்) இடம்பெற்றுள்ளார். அதனால் அவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அங்கிதா ரெய்னா, நடாஷா பல்ஹா, பிரார்த்தனா தோம்ப்ரே ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.