

மும்பை இந்தியன்ஸை மடித்து அனுப்பிய வெற்றிக்குப் பிறகு சென்னை கேப்டன் தோனி, மும்பை பேட்டிங் பற்றி கவலைப்படவில்லை என்று தெரிவித்தார்.
ஆட்டம் முடிந்தவுடன் கேள்விகளுக்கு பதில் அளித்த தோனி, “மும்பை பேட்டிங் வரிசையை விட எங்களது பவுலிங் குறித்தே நான் அதிகம் கவலையடைந்தேன்.
ஆனால், எங்களது திட்டத்தை நாங்கள் கடுமையாகப் பின்பற்றவில்லை அவர்கள் ஆட்டத்துக்கு ஏற்ப நாங்களும் உத்திகளை மாற்றி வந்தோம்.
ஹர்பஜன் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடியதால் இந்த முறை முன்னதாக களமிறக்கப்படுவார் என்பதை எதிர்பார்த்தோம், அவருக்கு ரன் கொடுப்பதில்லை என்பதை முடிவு செய்தோம். அவர் பெரிய ஷாட்களை ஆடக்கூடியவர். ஆனாலும் அவரை ரன் எடுக்கவிடாமல் செய்ய திட்டமிட்டோம்.
முதலில் பவுலிங் செய்வதை நாங்கள் விரும்புவதன் காரணம், பிற்பகுதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதாலேயே. ஆனால் தொடக்க ஓவர்களை நாங்கள் அபாரமாக வீசினோம் என்றே கூறுவேன்.
மேலும் 180-190 ரன்கள் துரத்த முடியக் கூடியதே என்றே நான் கருதுகிறேன். முதல் சில ஓவர்கள் அபாரமாக அமைந்ததால் வெற்றி சுலபமானது” இவ்வாறு கூறினார் தோனி.