

கொல்கத்தாவில் நேற்று நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
கொல்கத்தாவில் கனமழை பெய்ததால் மைதானம் முழுக்க ஈரமானது. குறைந்தது தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டது.
டாஸ் கூடப் போடப்படாத நிலையில், ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ராஜஸ்தான் அணி 11 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.