Published : 27 May 2014 04:19 PM
Last Updated : 27 May 2014 04:19 PM

மாஸ்டர் பிளாஸ்டர் டெண்டுல்கரின் கால்பந்து அணியின் பெயர் கேரளா பிளாஸ்டர்ஸ்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) அணிகளில் கேரளா அணிக்கு சச்சின் டெண்டுல்கர் உரிமைதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் பெயர் கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப். இந்தப் பெயரை கேரளா முதல்வர் உம்மன் சாண்டி இன்று வெளியிட்டார்.

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கரும் உடனிருந்தார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் முதல்வர் உம்மன் சாண்டியைச் சந்தித்தார்.

அணியின் பெயரை வெளியிட்டு முதல்வர் சாண்டி பேசுகையில், "கேரள அரசும், கேரள மக்களும் இந்த முயற்சியை வரவேற்கின்றனர். மேலும் அணிக்கு அனைத்து உதவிகளும், வசதிகளும் செய்து தரப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கேரளாவில் நடைபெறும் தேசிய விளையாட்டுப்போட்டிகளின் போது சச்சின் டெண்டுல்கரை நல்லெண்ணத் தூதராக பணியாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.

சச்சின் டெண்டுல்கர் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துக் கூறுகையில், "என்னை மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைப்பார்கள் அதனை அடியொட்டி கால்பந்து அணிக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் என்று பெயர் வைக்க முடிவெடுத்தோம். கிரிக்கெட் தவிர பிற ஆட்டங்களையும் நான் விரும்பிப் பார்ப்பதுண்டு. இந்திய கிரிக்கெட் அணியிலும் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் கால்பந்து விளையாடுவது என்பது எங்களது நீண்டகால பயிற்சி முறையாகும்.

கேரளாவிலிருந்து இந்திய கால்பந்து அணிக்கு விளையாடியவர்கள் ஒருகாலத்தில் அதிகம் ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் துவங்கப்பட்டதன் நோக்கமே இந்தியாவில் கால்பந்தை புகழடையச்செய்வதுததற்காகத்தான்" என்றார்.

மேலும் முதல்வர் உம்மன் சாண்டி கேட்டுக்கொண்டது போல் தேசிய தடகளப்போட்டிகளின் போது நல்லெண்ணத் தூதராக நிச்சயம் பொறுப்பேற்பேன் என்று கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

இந்த புதிய கால்பந்து கிளப்பில் 1,25,000 பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் இதற்காக சச்சினுக்கு நன்றி என்றும் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x