

அர்ஜுனா விருதுக்கு இந்திய ஹாக்கி வீரர்கள் வி.ஆர்.ரகுநாத், தரம்வீர் சிங், துஷர் கன்டேகர், முன்னாள் கேப்டன் பரத் சேத்ரி ஆகியோரின் பெயரை பரிந்துரைத்துள்ளது ஹாக்கி இந்தியா.
வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மேஜர் தயான்சந்த் விருதுக்கு மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சுமராய் திதியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய சீனியர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர். இந்திய மகளிர் ஜூனியர் அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரமேஷ் பதானியாவின் பெயர், தலைசிறந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.