

5-வது தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் (ஆடவர் ஏ டிவிசன்) ஹாக்கி பஞ்சாப், ஹாக்கி ஒடிசா அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் ஹாக்கி பஞ்சாப் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹாக்கி ஹிமாச்சலப் பிரதேச அணியை வீழ்த்தியது. பஞ்சாப் அணி தரப்பில் ஹர்மான்பிரீத் சிங் இரு கோல்களையும் (3 மற்றும் 10-வது நிமிடங் களில்), சிம்ரன்ஜித் சிங் ஒரு கோலையும் (43-வது நிமிடம்) அடித்தனர்.
மற்றொரு அரையிறுதியில் ஹாக்கி ஒடிசா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஹாக்கி ஹரியாணா அணியைத் தோற்கடித்தது. ஒடிசா தரப்பில் சுமன் குஜூர் இரு கோல்களையும் (53 மற்றும் 55-வது நிமிடங்களில்), பிரகாஷ் பர்லா ஒரு கோலையும் (63-வது நிமிடம்) அடித்தனர்.
இறுதிப் போட்டி இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஹரியாணாவும், ஹிமாச்சலப் பிரதேசமும் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் அனைத்தும் டி.டி.ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.