

உலக பேட்மிண்டன் மகளிர் பிரிவு தரவரிசையில் இந்திய நட்சத்திரம் சாய்னா நெவால் மீண்டும் முதலிடம் பிடித்தார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து சாய்னா நெவால் விலகினார். ஆனால் சீன வீராங்கனை லி ஸ்யுரூயும் சிங்கப்பூர் தொடரிலிருந்து விலகியதால் சாய்னா நெவால் மீண்டும் முதலிடம் பிடித்தார்.
முன்னதாக பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்த சாய்னா, மலேசிய ஓபன் தொடரில் லி ஸ்யுரூயிடம் அரையிறுதியில் தோல்வி தழுவியதன் மூலம் முதலிடத்தை இழந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் சிங்கப்பூர் தொடரிலிருந்து சாய்னா விலகினார். ஆனால் இவரது வைரியான சீன வீராங்கனை ஸ்யுரூயும் விலகுவதாக அறிவிக்க தற்போது சாய்னா மீண்டும் முதலிடம் பிடித்தார்.
பி.வி.சிந்து 2 இடங்கள் பின்னடைவு கண்டு 12-ம் இடத்துக்கு வந்தார்.
ஆடவர் தரநிலையில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 4-ம் இடத்திலும் காஷ்யப் 14-ம் இடத்திலும் உள்ளனர்.