பஞ்சாப் அணியால் சிறந்த பேட்ஸ்மேன் ஆகியிருக்கிறேன்: டேவிட் மில்லர் பெருமிதம்

பஞ்சாப் அணியால் சிறந்த பேட்ஸ்மேன் ஆகியிருக்கிறேன்: டேவிட் மில்லர் பெருமிதம்
Updated on
1 min read

பஞ்சாப் அணிக்காக விளையாடியதன் மூலம் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்திருக்கிறேன் என டேவிட் மில்லர் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்க வீரரான டேவிட் மில்லர், தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக 3-வது முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடும் மில்லர் மேலும் கூறியதாவது: பஞ்சாப் அணிக்காக விளையாடியதன் மூலம் எனது பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வலுவான பேட்ஸ்மேனாக உருவெடுத்திருக்கிறேன். எப்போது எப்படி ஆட வேண்டும் என்பதை இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு மிகுந்த நம்பிக்கையை தந்திருக்கிறது.

அதேநேரத்தில் நான் இந்த நிலையோடு நிற்கவில்லை. இன்னும் சிறந்த வீரராக வரவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in