

சர்ச்சைக்குரிய பந்துவீச்சு முறைக்காக சோதனைகளைக் கடந்து வந்துள்ள சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பாகிஸ்தான் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது இதில் அஜ்மல் மீண்டும் இடம்பெற்றார். டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளில் அஜ்மல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பையில் சரியாக விளையாடாத உமர் அக்மல் 3 அணியிலும் இல்லை. அகமது ஷெசாத், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை.
ஃபவாத் ஆலம், இவர் உலகக் கோப்பையில் விளையாடவில்லை. ஆனால் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார். ஒருநாள் அணியில் யூனிஸ் கான் இடம்பெறவில்லை. ஆனால் அவருக்கு ஓய்வு அளித்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் டெஸ்ட் மற்றும் டி20 அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
மொகமது ஹபீஸ் 3 அணிகளிலும் இடம்பெற்றுள்ளார். உலகக் கோப்பையில் கலக்கிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் மற்றும் சோஹைல் கான் 3 அணிகளிலும் இடம்பிடித்துள்ளனர்.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் மொகமது ரிஸ்வான் மற்றும் இடது கை பேட்ஸ்மென் சமி அஸ்லம் என்ற இரண்டு புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் டெஸ்ட் அணி:
மொகமது ஹபீஸ், பாபர் ஆஸம் (அறிமுகம்), சமி அஸ்லாம், மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), ஆசாத் ஷபிக், அசார் அலி, யூனிஸ் கான், ஹாரிஸ் சோஹைல், சயீத் அஜ்மல், யாசிர் ஷா (லெக் ஸ்பின்னர்), சுல்பிகர் பாபர், சர்பராஸ் அகமது, வஹாப் ரியாஸ், ஜுனைத் கான், சோஹைல் கான், ரஹத் அலி.
ஒருநாள் போட்டி அணி:
சர்பராஸ் அகமது, மொகமது ஹபீஸ், அசாத் ஷபிக், ஃபவாத் ஆலம், அசர் அலி (கேப்டன்), மொகமது ரிஸ்வான், ஹாரிஸ் சோஹைல், ஷோயப் மக்சூத், சமி அஸ்லம், அஜ்மல், யாசிர் ஷா, வஹாப் ரியாஸ், ஈசான் அடில், சோஹைல் கான்.
டி20 அணி:
ஷாகித் அஃப்ரீடி (கேப்டன்), அகமது ஷெசாத், சர்பராஸ் அகமது, ஹபீஸ், முக்தர் அகமது, ஷோயப் மக்சூத், ஹாரிஸ் சோஹைல், மொகமது ரிஸ்வான், சயீத் அஜ்மல், சொஹைல் தன்வீர், சாத் நசீம், வஹாப் ரியாஸ், சோஹைல் கான், உமர் குல், ஜுனைத் கான்.