Last Updated : 21 Apr, 2015 10:01 AM

 

Published : 21 Apr 2015 10:01 AM
Last Updated : 21 Apr 2015 10:01 AM

வெற்றி நடை போடும் ராஜஸ்தானை சமாளிக்குமா பஞ்சாப்?

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள ராஜஸ்தான், தனது வெற்றியைத் தொடரும் முனைப்பில் பஞ்சாபை சந்திக்கிறது. 4 ஆட்டங்களில் விளை யாடி 3-ல் தோற்றுள்ள பஞ்சாப் அணி, ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர் வெற்றி, கேப்டன் வாட்சனின் வருகை ஆகியவற்றால் புதிய உத்வேகம் பெற்றுள்ள ராஜஸ்தானை வீழ்த் துவது அவ்வளவு எளிதல்ல என்றா லும், பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் பார்முக்கு திரும்பும்பட்சத்தில் பஞ்சாப் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ராஜஸ்தான் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. காயத்திலிருந்து மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள கேப்டன் வாட்சன் தனது முதல் ஆட்டத்திலேயே 73 ரன்கள் குவித்து உச்சகட்ட பார்முக்கு வந்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

மிரட்டும் ரஹானே

அஜிங்க்ய ரஹானே, கேப்டன் வாட்சன், ஸ்டீவன் ஸ்மித், தீபக் ஹூடா, ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டூவர்ட் பின்னி என வலுவான பேட்ஸ் மேன்கள் அந்த அணியில் உள்ள னர். தொடர்ந்து அசத்தலாக ஆடி வரும் ரஹானே, 5 ஆட்டங்களில் 231 ரன்கள் குவித்து இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ரஹானே-வாட்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16.1 ஓவர் களில் 144 ரன்கள் குவித்தது. ரஹானே 55 பந்துகளிலும் 76 ரன்களும், வாட்சன் 47 பந்துகளில் 73 ரன்களும் குவித்தனர். எனவே ராஜஸ்தானின் ரன் குவிப்பை கட்டுப் படுத்துவதற்கு ரஹானே, வாட்சன் ஆகியோரை ஆரம்பத்திலேயே வீழ்த்துவது அவசியம்.

வேகப்பந்துவீச்சைப் பொறுத்த வரையில் கிறிஸ் மோரிஸ், ஷேன் வாட்சன், ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரை நம்பி யுள்ளது ராஜஸ்தான். தொடர்ந்து அபாரமாக பந்துவீசி வரும் ஆல்ரவுண்டர் மோரிஸ், பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்.

சுழற்பந்து வீச்சில் பிரவீண் டாம்பே, தீபக் ஹூடா, அங்கித் சர்மா ஆகியோர் பலம் சேர்க்கின்ற னர். இதுவரை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பிரவீண் டாம்பே, பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவலையளிக்கும் பேட்டிங்

பஞ்சாப் அணியில் சேவாக், முரளி விஜய், கேப்டன் பெய்லி, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதும் அந்த அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. அதனால் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் மில்லருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா களமிறக்கப்பட்டார். ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை. பேட்டிங்கில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார் பெரேரா. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் இதுவரை 65 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது அந்த அணிக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் ஜான்சன், அனுரீத் சிங், சந்தீப் சர்மா ஆகியோரையும், சுழற் பந்து வீச்சில் அக்ஷர்படேல், குருகீரத் சிங் ஆகியோரையும் நம்பியுள்ளது பஞ்சாப்.

இதுவரை

இவ்விரு அணிகளும் 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் 9 முறையும், பஞ்சாப் 5 முறையும் வெற்றி கண்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x