

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் படுதோல்வி கண்டதைத் தொடர்ந்து அந்த அணியின் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறிய தாவது: பாகிஸ்தான் படுதோல் வியைச் சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் வக்கார் யூனிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அவர் அப்படி செய்தால் அவருக்கும் அது நல்லது. வங்கதேச அணி அதன் கிரிக்கெட்டை மேம்படுத்தியுள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் இவ்வளவு மோசமாக தோற்றிருப்பதை சகித்துக்கொள்ள முடியாது.
இந்தத் தோல்விக்கு பாகிஸ் தான் அணி நிர்வாகம்தான் முழுப்பொறுப்பு. வங்க தேசத்துக்கு எதிரான 3 போட்டி களிலும் சரியான 11 வீரர்களைக் கூட அவர்களால் களமிறக்க முடியவில்லை. தற்போதைய கேப்டன் அசார் அலி எதிர்காலத் தில் சிறந்த கேப்டனாக ஜொலிப் பார் என தோன்றவில்லை என்றார்.
ஷோயிப் அக்தர் கூறு கையில், “தற்போது வங்கதேசத் துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்றிருக்கிறோம். அடுத்து நடைபெறவுள்ள வங்கதே சத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பாகிஸ்தானுக்கு தோல்விதான் கிடைக்கும் என்றார்.