

ஊக்கமருந்து பயன்படுத்திய மலேசி யாவைச் சேர்ந்த முன்னாள் முதல்நிலை பாட்மிண்டன் வீரர் லீ சாங்குக்கு 8 மாத காலம் தடை விதித்துள்ளது சர்வதேச பாட் மிண்டன் சம்மேளனம்.
எனினும் அவருடைய தடைக் காலம் கடந்த ஆகஸ்ட் 30-லிருந்து கணக்கில் கொள்ளப் பட்டுள்ளதால் வரும் 30-ம் தேதி தடைக்காலம் முடிவுக்கு வருகிறது. அதனால் அவர் அடுத்த மாதம் முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கலாம்.
கடந்த ஆகஸ்டில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடை பெற்ற போட்டியின்போது லீ சாங்கிடம் நடத்தப்பட்ட சோதனை யில் அவர் ஊக்கமருந்து பயன் படுத்தியது கண்டுபிடிக் கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இது தொடர்பான விசாரணை நெதர்லாந்தில் நடைபெற்று வந்தது. சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனத்தின் ஊக்கமருந்து தடுப்பு விசாரணைக் குழு முன்பு கடந்த 11-ம் தேதி ஆஜரான லீ சாங்கின் வழக்கறிஞர், “லீ சாங் வேண்டுமென்றே ஊக்க மருந்தை எடுக்கவில்லை. அவருடைய உணவில் இருந்திருக்கிறது. எனவே அவருக்கு குறைந்தபட்ச தண்டனையை மட்டுமே வழங்க வேண்டும்” என வாதிட்டார்.
அதைக்கேட்ட விசாரணைக் குழு, “லீ சாங் வேண்டுமென்றே ஊக்கமருந்து எடுக்கவில்லை. ஆனால் ஊக்க மருந்து விவகாரத்தில் கவனக்குறை வாக இருந்திருக்கிறார். அதனால் அவருக்கு 8 மாத காலம் தடை விதிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.