Last Updated : 26 Apr, 2015 12:35 PM

 

Published : 26 Apr 2015 12:35 PM
Last Updated : 26 Apr 2015 12:35 PM

ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றி திருப்பு முனையாக இருக்கும்: விராட் கோலி நம்பிக்கை

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான வெற்றி எங்கள் அணிக்கு சரியான நேரத்தில் கிடைத்திருக்கும் சரியான வெற்றி. நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற இந்த வெற்றி திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறோம் என்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வலுவான அணியான ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்தது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பெங்களூர், இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் நெருக்கடியிலிருந்து ஓரளவு மீண்டுள்ளது.

ஆட்டம் முடிந்த பிறகு வெற்றி குறித்து விராட் கோலி மேலும் கூறியதாவது: ராஜஸ்தானுக்கு எதிராக நாங்கள் நினைத்தபடி விளையாடி வென்றிருக்கிறோம். நாங்கள் இனி தொடர்ந்து வெற்றி நடைபோட இந்த வெற்றி திருப்புமுனையாக இருக்கலாம். இது சரியான நேரத்தில் கிடைத்த சரியான வெற்றி. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தோம்.

இப்படியொரு ஆட்டத்தை ஆடிவிட்டால் வெற்றிக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்பது எனக்கு தெரியும். இந்த வெற்றி அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். பவுலர்கள் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தினர். பீல்டிங்கும் சிறப்பாக அமைந்தது என்றார்.

வாட்சன் சாடல்

தோல்வி குறித்துப் பேசிய ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வாட்சன், “போதுமான ஸ்கோரை குவிக்க எங்கள் பேட்ஸ்மேன்கள் தவறிவிட்டனர். பெங்களூர் அணி எங்களை முழுவதுமாக வீழ்த்திவிட்டது. இங்குள்ள சூழலை அவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். இந்தத் தோல்விக்கு எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது. ஒவ்வொரு போட்டியுமே முக்கியமானதாகும். வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்” என்றார்.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x