Published : 06 Apr 2015 09:50 AM
Last Updated : 06 Apr 2015 09:50 AM

மியாமி ஓபன் டென்னிஸ்: 8-வது முறையாக செரீனா சாம்பியன்

பிரையன் சகோதரர்களுக்கு ஆண்கள் இரட்டையர் பட்டம்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் செரீனா வில்லி யம்ஸ் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் தெற்கு புளோ ரிடாவிலுள்ள மியாமி நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லி யம்ஸும், 12-வது இடத்திலுள்ள ஸ்பெயினின் கார்லா சுவாரெஸ் நவர்ரோவும் நேற்று முன்தினம் மோதினர்.

இதில், செரீனா வில்லியம்ஸ் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி 6-2, 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இப்போட்டி 56 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது. குறிப்பாக 2-வது செட் 24 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

இது அவருக்கு 8-வது மியாமி பட்டமாகும். இதன்மூலம், ஒரு குறிப்பிட்ட பட்டத்தைக் குறைந்தது 8 முறை கைப்பற்றிய வீராங் கனைகள் பட்டியலில் மார்ட்டினா நவரத்திலோவா, ஸ்டெபி கிராப், கிறிஸ் எவெர்ட் ஆகியோருடன் இணைந்தார் செரீனா. மியாமி ஓபனில் 80 போட்டிகளில் விளை யாடியுள்ள செரீனா அவற்றில் 73 முறை வெற்றி பெற்றுள்ளார்.

இப்போட்டியில் 2-வது இடம் பிடித்த கார்ஸா சுவாரெஸ் நவர்ரோ தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறி யுள்ளார். சுவாரெஸ் நவர்ரோ செரீ னாவுடன் மோதிய 5 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளார்.

பிரையன் சகோதரர்கள்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மைக் பிரையன்- பாப் பிரையன் சகோதரர்கள் கோப்பையைக் கைப்பற்றினர். இரட்டையர்களான பிரையன் சகோதரர்கள் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ஜேக் சாக்- கனடாவின் வாசெக் பாஸ்பிஸில் ஜோடியை எதிர்கொண்டனர்.

முதல் செட்டை பிரையன் சகோதரர்கள் 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினர். 2-வது செட்டில் ஜேக்-வாசெக் ஜோடி அபாரமாக ஆடி 6-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வெற்றி யைத் தீர்மானிக்கும் 3-வது செட்டை 10-8 என்ற கணக்கில் பிரையன் சகோதரர்கள் கைப்பற்றி கோப்பையை வசப்படுத்தினர்.

முன்னதாக, இன்டியன் வெல்ஸ் போட்டியில் காலிறுதியில் ஜேக்-வாசெக் ஜோடியிடம் பிரையன் சகோதரர்கள் தோல்வியடைந் திருந்தனர். மேலும் விம்பிள்டன் இறுதிப்போட்டி உட்பட கடைசி யாக விளையாடிய மூன்று போட்டி களில் ஜேக்-வாசெக் ஜோடி வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. பிரையன் சகோதரர்கள் மியாமி ஆண்கள் இரட்டையர் கோப்பையை நான்காவது முறை யாக வென்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x