உலகக்கோப்பையில் இதுவரை 19,122 ரன்கள் குவிப்பு

உலகக்கோப்பையில் இதுவரை 19,122 ரன்கள் குவிப்பு
Updated on
1 min read

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து மைதானமான ஹாமில்டனில் அதிக சிக்சர்கள், பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை ஹாமில்டன் மைதானத்தில் இந்த உலகக்கோப்பை போட்டிகளில் 51 சிக்சர்கள் 153 பவுண்டரிகளும் விளாசப்பட்டுள்ளன. ஆகக்குறைந்த சிக்சர்கள் அடிக்கப்பட்ட மைதானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் மைதானத்தில். இங்கு 4 சிக்சர்கள் மட்டுமே இந்த உலகக்கோப்பையில் அடிக்கப்பட்டுள்ளது.

பேட்ஸ்மென்கள் எதிர்பார்க்கும் உயரத்தில் பந்துகள் எழும்புவதும், பக்கவாட்டு ஸ்விங் அதிகம் இல்லாததும், பேட்ஸ்மென்கள் பந்துகளை வரும் திசையிலேயே நேராகவும், கொஞ்சம் ஷார்ட்டாக பிட்ச் செய்தால் கூட குறைந்த தூரம் உள்ள பக்கவாட்டு பவுண்டரிகளுக்கு சிக்சர்களையும் பவுண்டரிகளையும் விளாச முடிந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை 21,593 பந்துகளில் 19,122 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதில் 35 சதங்கள், 96 அரைசதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் 71 பேட்ஸ்மென்கள் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர். ஓவருக்கான ரன் விகிதம் 5.31.

பந்துவீச்சாளர்களுக்கு இந்த உலகக்கோப்பை போட்டிகள் எவ்வளவு பாரபட்சமாக இருந்து வருகிறது என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் 10,482 பந்துகளில் 9,471 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் 21 சதங்கள், 44 அரைசதங்கள் அடங்கும். நியூசிலாந்தில் 11,111 பந்துகளில் 9,651 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் 14 சதங்கள், 52 அரைசதங்கள் அடங்கும். மொத்தம் 388 சிக்சர்களும் 1862 பவுண்டரிகளும் விளாசப்பட்டுள்ளன.

388 சிக்சர்களில் ஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட சிக்சர்கள் எண்ணிக்கை 169. பவுண்டரிகளின் எண்ணிக்கை 893.

நியூசிலாந்து மைதானங்களில் 219 சிக்சர்கள், 969 பவுண்டரிகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in