

பாகிஸ்தானுக்கு எதிராக இரு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் மிட்செல் ஸ்டார்க்.
இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் முகமது சமி 17 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் 16 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
6
உலகக் கோப்பையில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பேட்ஸ்மேன்கள் கேட்ச் மூலம் ஆட்டமிழப்பது 6-வது முறையாகும். பாகிஸ்தான் விளையாடிய போட்டியில் இதுபோன்று நடப்பது 4-வது முறையாகும். அதில் 3 இந்த உலகக் கோப்பையில் நடந்துள்ளது.
43
ஒருநாள் போட்டியில் 43-வது முறையாக பாகிஸ்தானை ஆல்அவுட்டாக்கியுள்ளது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக முறை ஆல்அவுட் அணி பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
3003
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தோடு சேர்த்து ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டனாக 3,003 ரன்கள் குவித்துள்ளார் மிஸ்பா உல் ஹக். இந்த மைல்கல்லை எட்டிய 2-வது பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா. முதல் கேப்டன் இம்ரான் கான் ஆவார். அவர் பாகிஸ்தான் கேப்டனாக 3,247 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச அளவில் 16 பேர், கேப்டனாக இருந்து 3,000 ரன்கள் குவித்துள்ளனர்.
7
உலகக் கோப்பையில் 7-வது முறையாக அரை யிறுதிக்கு முன்னேறியுள்ளது ஆஸ்திரேலியா. இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகமுறை அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் தலா 6 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.