மெல்போர்னில் ஆடுவதில் எந்த அச்சமும் இல்லை: டிம் சவுதி திட்டவட்டம்

மெல்போர்னில் ஆடுவதில் எந்த அச்சமும் இல்லை: டிம் சவுதி திட்டவட்டம்
Updated on
1 min read

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை மெல்போர்ன் மைதானத்தில் விளையாடுவதில் எந்த அச்சமும் இல்லை. ஆஸ்திரேலியாவை வீழ்த்தக்கூடிய அளவுக்கு அனுபவம் பெற்ற வீரர்களும், அதிரடியான பேட்ஸ்மேன்களும் எங்கள் அணியில் இருக்கிறார்கள் என டிம் சவுதி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் மெல்போர்னில் நாளை நடக்கிறது. இந்த நிலையில் மெல்போர்ன் பற்றிய தங்களுடைய அனுபவ அறிவு இறுதிப் போட்டியில் முக்கியப் பங்கு வகிக்கும் என ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் கூறியுள்ளார்.

அந்த அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஹேடனோ, நியூஸிலாந்து இதுவரை அவர்களுடைய சொந்த மண்ணில் விளையாடியுள்ளது. அங்குள்ள மைதானங்கள் சிறியவை. ஆனால் மெல்போர்ன் மைதானம் பெரியது. அதனால் அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய டிம் சவுதி, “மெல்போர்ன் மைதானம் பெரிய மைதானம் என்பதை பற்றி யெல்லாம் கவலைப் பட வில்லை. இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற எங்கள் கனவு நனவாகியிருக்கிறது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலி யாவை அதன் சொந்த மண்ணில் அதுவும் உலகின் தலைசிறந்த மைதானத்தில் சந்திப்பது நல்லது தான்.

நீண்ட காலமாக நாங்கள் இந்த மைதானத்தில் விளை யாடவில்லை. அதேநேரத்தில் 2009-ல் இங்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலி யாவை வீழ்த்திய இனிய நினைவுகள் எங்களிடம் இருக்கிறது. எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இந்தியாவில் பெரிய ரசிகர் கூட்டத்தின் முன்பு விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். இறுதி ஆட்டத்தை சுமார் 1 லட்சம் பேர் மைதானத்தில் இருந்து பார்ப்பார்கள். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in