

"கிறிஸ் கெய்ல் என்னிடம் வந்து 'வாழ்த்துக்கள் 200 ரன் லீகிற்கு வரவேற்கிறேன்' என்று கூறியது வேடிக்கையாக இருந்தது”
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக உலகக்கோப்பை காலிறுதியில் 237 ரன்களை அடித்து கிறிஸ் கெய்லின் உலகக்கோப்பை இரட்டைச் சத (215) சாதனையை முறியடித்தார் நியூசிலாந்து தொடக்க வீரர் மார்டின் கப்தில்.
“கிறிஸ் கெய்ல் என்னிடம் வந்து: "வாழ்த்துக்கள், 200 ரன்கள் லீகிற்கு வரவேற்கிறேன்" என்றார். அது வேடிக்கையாக இருந்தது. அவருக்குப் பின்னால் அனைவருமே வாழ்த்துக்கள் தெரிவிக்கும் உணர்வில் இருந்தனர்.
தொடக்கத்திலிருந்தே பந்து வரும் போது என்ன ஆடவேண்டுமோ அதனை ஆடினேன். கடைசி 10 ஓவர்கள் வந்த பிறகு சில பவுண்டரிகளை அடித்து கேளிக்கை ஆட்டம் ஆட விரும்பினேன்.
மார்ட்டின் குரோவ் கொடுத்த ஆலோசனைகளின் உதவியுடன் கால்களை நன்றாக நகர்த்தினேன், இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே பக்கவாட்டில் ஷாட்கள் ஆடுவதைத் தவிர்த்து நேராக ஆடத் தொடங்கினேன். இதுதான் வெற்றிக்கு வித்திட்டது. இப்போதைக்கு இது நன்றாகக் கைகொடுக்கிறது.
உலகக்கோப்பை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பு பற்றி அணியின் வீரர்கள் உற்சாகமாக உள்ளனர். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு பயிற்சி அமர்வுகள் உள்ளன.” என்றார் மார்டின் கப்தில்.