

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டதாக 3 கேலரிகளை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பார்வையாளர்களின் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தக் குறிப்பிட்ட கேலரிகளை இடிப்பதற்கான திட்டத்தினை சென்னை மாநகராட்சிக்கு வழங்கிய உச்ச நீதிமன்றம் அனுமதி பெற்ற பின் இடிக்க உத்தரவிட்டுள்ளது.
பார்வையாளர்கள் அமரும் 3 கேலரியில் 2-ஐ பயன்படுத்த அனுமதி கேட்டிருந்த கிரிக்கெட் சங்கக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது..
மேலும், மற்ற பார்வையாளர்கள் கேலரிகளைப் பயன்படுத்த உரிய அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கிரிக்கெட் போட்டிகளை விட பார்வையாளர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் சென்னையில் நடைபெறும் போது இடிக்க உத்தரவிடப்பட்ட இந்த 3 பார்வையாளர்கள் கேலரி மூடப்படலாம் என்று தெரிகிறது.