

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை யில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை சாய்னா நெவாலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சாய்னாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்ததற்காக இந்த நாட்டு மக்களுடன் இணைந்து நானும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடை கிறேன். இதற்காக உங்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது உங்களுடைய திறமைக்கும், தகுதிக்கும், விடாமுயற்சிக்கும், பயிற்சிக்கும் கிடைத்த மரியாதை. அதற்கும் மேலாக உங்களுடைய மன உறுதி மற்றும் தீர்மானத்தால்தான் இத்தகைய உச்சத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது. சாதிக்கத் துடிக்கும் லட்சக்கணக்கான இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்மா திரியாக விளங்குகிறீர்கள்.
உங்களுடைய வெற்றிக் குக் காரணமாகவும் உறுதுணை யாகவும் இருந்த உங்களுடைய பெற்றோருக்கும் எனது வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன்.