இந்திய சுழற் பந்துவீச்சு அச்சம்: வலைப்பயிற்சிக்கு ஷேன் வார்னை அழைத்த கிளார்க்

இந்திய சுழற் பந்துவீச்சு அச்சம்: வலைப்பயிற்சிக்கு ஷேன் வார்னை அழைத்த கிளார்க்
Updated on
1 min read

சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற கணிப்பை அடுத்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், வலைப்பயிற்சிக்கு ஷேன் வார்னை அழைத்து பந்துவீசச் செய்து பயிற்சி மேற்கொண்டார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் சிட்னி பிட்சில் அச்சுறுத்தலாகத் திகழலாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறியதையடுத்து மைக்கேல் கிளார்க், ஷேன் வார்னை அழைத்தார்.

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஷேன் வார்ன், சிறிது நேரம் கழித்து தனது லெக் ஸ்பின், கூக்ளிக்களை வீசத் தொடங்கினார். பல பேட்ஸ்மென்களுக்கு அதனை சரியாக ஆட வரவில்லை.

வலைப்பயிற்சி முடிந்த பிறகு ஷேன் வார்ன், கிளார்க் ஆகியோரிடையே நீண்ட உரையாடல் நடைபெற்றது.

கிளார்க் வலையில் பேட் செய்த போது நடுவரின் நிலையிலிருந்து ஷேன் வார்ன் அவரது பேட்டிங்கை பார்வையிட்டார். அதன் பிறகு கிளார்க் பேட் செய்ய வார்ன் வீசினார். ஆஃப் ஸ்பின் போன்ற சில கூக்ளிக்களை அவர் வீசினார்.

இதற்கிடையே வலைப்பயிற்சியை பார்வையிட வந்த இந்திய ரசிகர்கள் ஷேன் வார்னுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது ஆஸ்திரேலிய கேப்டனையும் வார்னையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in