மார்ட்டினாவுடன் ஜோடி சேர்கிறார் சானியா

மார்ட்டினாவுடன் ஜோடி சேர்கிறார் சானியா
Updated on
1 min read

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னாள் முதல் நிலை வீராங்கனையான மார்ட்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.

முன்னதாக இந்த சீசனில் சீன தைபேவின் சூ வெய்யுடன் ஜோடி சேர்ந்து விளையாடத் தொடங்கிய சானியா, அவருடன் இணைந்து 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில், இப்போது ஜோடியை மாற்றியுள்ளார்.

சானியா-சூ வெய் ஜோடி துபை ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் 2-வது சுற்றோடும், பிரிஸ்பேன் போட்டியில் அரையிறுதியோடும் வெளியேறியது. தோஹாவில் நடைபெற்ற போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது.

மார்ட்டினா ஹிங்ஸுடன் ஜோடி சேர்வது குறித்துப் பேசிய சானியா, “கடந்த ஜனவரியில் இருந்து சூ வெய்யுடன் இணைந்து விளையாடத் தொடங்கினேன். 4 போட்டிகளில் விளையாடியபோதும் பெரிய அளவில் வெற்றி கிடைக்க வில்லை. அட்வான்டேஜ் நிலையில் ஆடுகிறபோது அவரால் சிறப்பாக ஆட முடிய வில்லை. எனக்கு ஈடுகொடுத்து ஆட முடியாமல் தடுமாறுகிறார்.

அதைத் தொடர்ந்து இப்போது மார்ட்டினா ஹிங்கி ஸுடன் இணைந்து விளையா டவுள்ளேன். அவர் மிகுந்த அனுபவம் கொண்ட வீராங்கனை மட்டுமல்ல, அட்வான்டேஜ் நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர் ஆவார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in