

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான அரையிறுதி போட்டியை வைத்து ஹைதரா பாத்தில் ரூ. 100 கோடிக்கும் மேலாக சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக ஹைதராபாத் நகர காவல் ஆணையர் ஆனந்த் கூறுகையில், “ரகசியமாக நடைபெறும் இந்த சூதாட்டத்தில் பலர் வீட்டுமனைகள், வீடுகள், கார், மோட்டார் சைக்கிள், பணம் மற்றும் நகைகளை வைத்து சூதாடுகின்றனர்.
இதுவரை ரூ. 100 கோடிக்கும் அதிகமாக சூதாட்டம் நடந்து வருவதாக தகவல் வந்துள்ளது. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் பகுதியில் மிக அதிகமாக சூதாட்டம் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கண்காணிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.