Published : 26 Mar 2015 10:13 AM
Last Updated : 26 Mar 2015 10:13 AM

தொழில் முனைவோர் திறனை மேம்படுத்த தொழில் வளர்ச்சி மையம்

தொழில் முனைவோர் திறனை மேம்படுத்த தொழில் முனைவோர் மற்றும் தொழில் வளர்ச்சி மையம் தொடங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் முனை வோர் திறனை மேம்படுத்தும் நோக்கில், தொழில் முனைவோர் மற்றும் தொழில் வளர்ச்சி மையம் ஒன்றை பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் தொடங்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. இதற்காக முதற்கட்ட நிதியுதவியாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழில் தொடங்கத் தேவையான அறிவுரைகள், பயிற்சி மற்றும் இதர சேவை களை இந்த மையம் வழங்கும். இதன் மூலம், இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 2015-16-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.100 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 2015-16-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப் பட்டுள்ளது.

தொழில் முனைவோர் வசதிக்காக ஒற்றைச்சாளர முதலீட்டாளர் இணையதளம்

சென்னை

தொழில் முனைவோர் வசதிக் காக 2015-16 நிதியாண்டில் ஒற் றைச்சாளர முதலீட்டாளர் இணை யதளம் தொடங்கப்பட உள்ளது.

தொழில் செய்வதற்கான சூழலை எளிமையாக்கும் நடவடிக் கையாக பல்வேறு துறை களில் தேவைப்படும் அனைத்து உரிமங்கள் மற்றும் ஒப்புதல் களையும் பெற தொழில் முனை வோர்கள் விண்ணப்பிப்பதற்கு ஏதுவான ஒரு ஒற்றைச்சாளர முதலீட்டாளர் இணையதளம் (Single Window Investor Portal) 2015-16 நிதியாண்டில் தொடங்கப்படும். இதனால், வெளிப்படைத் தன்மையுடன் விண்ணப்பங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு குறிப்பிட்ட காலவரையறைக்குள் அவற்றுக்குத் தீர்வு காணப்படும்.

மாநிலத்தில் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஊக்கு விக்கும் நோக்கத்தோடு மதுரை-தூத்துக்குடி தொழில் மேம்பாட்டு வழித்தடத் திட்டத்தைச் செயல் படுத்த தமிழ்நாடு தொழில் கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற தனியார் நிதி நிறுவனங்களோடு இணைந்து தமிழ்நாடு கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்தையும் இந்த வாரியம் அமைக்க உள்ளது. அரசு, தனியார் துறை பங்களிப்புத் திட்டம் மற்றும் சிறப்பு வழித்தட மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்படும் பணிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கும் இந்நிறுவனம் மூலம் கடனுதவி வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x