Published : 30 Mar 2015 10:02 am

Updated : 30 Mar 2015 10:02 am

 

Published : 30 Mar 2015 10:02 AM
Last Updated : 30 Mar 2015 10:02 AM

‘வட்டி குறைப்பு இருக்காது’

ஏப்ரல் 7-ம் தேதி ரிசர்வ் வங்கி நிதி மற்றும் கடன் கொள்கையை அறிவிக்க இருக்கிறது. இந்த அறிவிப்பில் வட்டி குறைப்பு இருக்காது என்று டிபிஎஸ் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால், அதே சமயத்தில் ஜூன் மாதம் 0.25 சதவீத வட்டி குறைப்பு இருக்கும் என்று டிபிஎஸ் தெரிவித்திருக்கிறது.

நடப்பு ஆண்டில் இதுவரை இரண்டு முறை வட்டி குறைப்பினை ரிசர்வ் வங்கி செய்துவிட்டது.

எதிர்பார்ப்புக்கு மாறாக ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் வட்டி குறைப்பு செய்ததால் ஏப்ரலில் இருக்க வாய்ப்பு இல்லை என்று டிபிஎஸ் தெரிவித்திருக்கிறது.

வட்டி குறைப்புரிசர்வ் வங்கிகடன் கொள்கைநிதிஅறிவிப்பு

You May Like

More From This Category

More From this Author