

கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் புத்தகத்தின் அட்டையில் சச்சின் டெண்டுல்கரின் படம் இடம் பெற்றுள்ளது.
ஓராண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியாகும் இப்புத்தகத்தின் இந்த ஆண்டுக்கான பதிப்பு இன்று லண்டனில் வெளியிடப்படுகிறது. இது 151-வது வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்டன் புத்தக அட்டைப்படத்தை அலங்கரிக்கும் முதல் இந்தியர் சச்சின் டெண்டுல்கர்.
இதற்கு முன்பு விஸ்டன் புத்தகத்தின் இந்திய பதிப்பான ‘விஸ்டன் இந்தியா’வில் சச்சினின் படம் அட்டையில் இடம் பெற்றுள்ளது. விஸ்டன் புத்தக அட்டை மஞ்சள் நிறத்தில் மட்டுமே வெளியிடப் படுகிறது. இப்போதைய புத்தகத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் தனது கடைசி போட்டியை முடித்துவிட்டு வெளியே வரும் காட்சி இடம் பெற்றுள்ளது.
விஸ்டன் புத்தக ஆசிரியரான லாரன்ஸ் பூத் இது தொடர்பாக கூறுகையில், விஸ்டன் புத்தகத்தில் தனக்கான இடத்தை சச்சின் அவராகவே எடுத்துக் கொண்டுவிட்டார். கிரிக்கெட்டில் அவரது ஆளுமையும், திறமையும் எவ்வித கேள்விக்கும் இடமில்லாதது என்று தெரிவித் துள்ளார்.